தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு

காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
x
காவிரியில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 40 புள்ளி 43 டி.எம்.சி தண்ணீரை நீர்வரத்து, மழையை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அணைகளில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார். மேலும் அரசின் இந்த கோரிக்கைக்கு ஆணையம் பதிலளிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சரின் இந்த முடிவு இருமாநில விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்