அமர்நாத் யாத்திரை : பக்தர்களுக்கு உதவும் இந்தோ திபெத் போலீசார்

அபாயகரமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் உதவும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
அமர்நாத் யாத்திரை : பக்தர்களுக்கு உதவும் இந்தோ திபெத் போலீசார்
x
அபாயகரமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்து, அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் உதவும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. கரடுமுரடான மலைப் பாதையில் பயணித்து, முதியோர், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அமர்நாத் செல்கின்றனர். பல்தால் பாதை வழியாக செல்லும் அவர்களுக்கு, மலைகளில் இருந்து உருண்டு வரும் கற்கள், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியோரம் உள்ள ஒற்றையடி பாதை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களின் துணையில், பயணிகள் அச்சமின்றி பயணிக்கும் காட்சிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்