விமானத்தில் புகைபிடித்த ஆந்திர பயணி கைது

விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
விமானத்தில் புகைபிடித்த ஆந்திர பயணி கைது
x
விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். ஆந்திராவை சேர்ந்த சையத் லியாகத் அலி என்ற அந்த பயணி, கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து வந்த விமானத்தில், நடுவானில் புகைபிடித்ததாக தெரிகிறது. விமான பணிப்பெண்கள் கண்டித்தும், அவர் கேட்காமல் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சையத் லியாகத் அலியை, சென்னை விமான நிலைய போலீசில், அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்