புதுச்சேரியில் 20 நாளில் 5 கார் திருட்டு : சி.சி.டி.வி. உதவியுடன் மர்ம நபருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 20 நாளில் 5 கார்கள் திருடு போய் உள்ளது.
புதுச்சேரியில் 20 நாளில் 5 கார் திருட்டு : சி.சி.டி.வி. உதவியுடன் மர்ம நபருக்கு போலீஸ் வலை
x
புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 20 நாளில் 5 கார்கள் திருடு போய் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முத்துமாரியம்மன் கோயில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திருடு போனது. இது குறித்து வரதன் என்பவர், பெரியகடை காவல் நிலையத்தில் வரதன் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார் திருடு போன அன்று நள்ளிரவு நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர் ஒருவர் , காரின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காரை திருடி செல்வது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சி.சி.டி.வி.யில் பதிவான மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்