மும்பையில் தொடரும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மஹாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் மும்பையில் வியாழக்கிழமை வரை கன மற்றும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மும்பையில் தொடரும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
மஹாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் மும்பையில் வியாழக்கிழமை வரை கன மற்றும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. வியாழக்கிழமை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் பேருந்து ர​யில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே மழையின் காரணமாக வெவ்வேறு பகுதிகளில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தன. மலாட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் குடிசைப்பகுதியில் வசித்த 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 75 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், மற்றம்அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்