புதுச்சேரியில் அசத்தும் அரசுப் பள்ளி : வீணாகும் பொருட்களையும் விலைபொருட்களாக மாற்றலாம்

வீணாகும் பொருட்களில் இருந்து விலை மதிப்புமிக்க பொருட்களை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது
x
புதுச்சேரி சேலியமேடு பகுதியில் இருக்கிறது கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி.. இந்த பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணிபுரிகிறார் உமாபதி. 

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்ததுக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, தன் துறை மாணவர்களுக்கு  கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்ட அவர், அதை இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்ய வேண்டும் என்றும் நினைத்தார். 

அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி எளிமையானது தான். ஆனால் இன்று அதனால் கிடைக்கும் பலனோ அதிகம்... 

யாரும் பயன்படுத்த முடியாத பொருட்களாக இருக்கும் பனை மட்டை, தென்னை மட்டை, தென்னங்கீற்று உள்ளிட்ட பொருட்களை கொண்டு கலைநயமிக்க  பொருட்களை செய்ய முடியும் என மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 

வீணாகும் பொருட்களில் இருந்து இப்படி ஒரு பொருளை உருவாக்க முடியுமா? என மாணவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அழகிய பொருட்கள் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. தங்கள் கற்பனை சிறகுகளை விரிக்கத் தொடங்கிய மாணவர்கள் விதவிதமான பொருட்களை செய்து அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்