காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

ஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
x
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட நான்கு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல் ஏற்கனவே உத்தரவிட்டபடி, ஜூன் மாத பங்கான 9 புள்ளி ஒன்று ஒன்பது டிஎம்சியை உடனடியாக திறந்துவிட ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கர்நாடகாவின் மேகதாது திட்டம் குறித்து இனி வரும் எந்த கூட்டத்தில் விவாதிக்க எடுத்துக் கொள்ளக் கூடாது, காவிரி படுகையின் எந்த இடத்திலும், புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது, நீர் விடுவிப்பதை கண்காணிக்க மத்திய நீர்வளக் குழுமத்திலிருந்து தகுதி வாய்ந்த பொறியாளரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தமிக அரசு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும்  என தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்