ஜார்கண்ட்: முஸ்லீம் இளைஞர் மீது நடத்திய தாக்குதல் கும்பல்

ஜார்கண்டில் தப்ரெஸ் என்ற முஸ்லீம் இளைஞர், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட்: முஸ்லீம் இளைஞர் மீது நடத்திய தாக்குதல் கும்பல்
x
ஜார்கண்டில் தப்ரெஸ் என்ற முஸ்லீம் இளைஞர், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தப்ரெஸ் பைக் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, கும்பல் ஒன்றால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு உதைக்கப்பட்டார். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தப்ரெஸ் தாக்கப்பட்டார். தாக்கும் போது, அந்த கும்பல் அவரை "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தாக்குதலுக்கு பின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தப்ரெஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்