ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை மறுதினம் ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, சீன, ரஷிய அதிபர்களை சந்தித்து அமெரிக்க வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி
x
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு அந்த நாடுகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 28, 29-ந்தேதிகளில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது இந்தியா, சீனா, ரஷியா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஏற்கனவே பிஷ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் உலக வர்த்தகம் தொடர்பாக சந்தித்து பேசி உள்ளனர். அதை தொடர்ந்து தற்போது ஜி-20 மாநாட்டின் இடையே 3 நாடுகளின் தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச இருப்பது தற்போது நிலவும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்