மீண்டும் முத்தலாக் தடை மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

அவசர சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட இருக்கும், முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மீண்டும் முத்தலாக் தடை மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
x
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், முத்தலாக் தடை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும், காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான மசோதா, காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா, பொது வளாக திருத்த மசோதா, உள்ளிட்டவைகளை நிறைவேற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, ஆதார் மற்றும் பிற சட்ட திருத்த மசோதா, ஓமியோபதி மத்திய கவுன்சில் சட்ட திருத்தம், பல் மருத்துவர்கள் மசோதா ஆகியவற்றுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு குழு பதவிக் காலத்தை 2 மாதம் நீட்டிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்