ஆந்திர முதல்வர் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் - 25 அமைச்சர்களும் பங்கேற்பு...

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஆந்திர முதல்வர் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் - 25 அமைச்சர்களும் பங்கேற்பு...
x
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பேர்னிநானி, ஆந்திராவில் ரேஷன் பொருட்கள்  அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் பயனாளிகள் வீட்டிற்கே சென்று  வழங்கப்படும் என தெரிவித்தார். குடும்ப வறுமையிலும் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் தாயாருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் பேர்னிநானி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்