ரயில்களில் மசாஜ் மையங்கள் - இந்திய ரயில்வே முடிவு

நாட்டிலேயே முதல்முறையாக ரயில்களில் மசாஜ் மையங்கள் திறக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்களில் மசாஜ் மையங்கள் - இந்திய ரயில்வே முடிவு
x
நாட்டிலேயே முதல்முறையாக ரயில்களில் மசாஜ் மையங்கள் திறக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நீண்ட தூர பயணிகளுக்கு, கலைப்பு தெரியாமல் இருக்கவும், வருமானத்தை பெருக்கவும் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதிக்கு கட்டணமாக 100-லிருந்து 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வர உள்ள இந்த சேவை, முதற்கட்டமாக இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயில்வே துறையின் வருவாய், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்