புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்...

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்...
x
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 78  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க-வை சேர்ந்த ஆர்.வி.ஜானகிராமன், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்துள்ளார்.  நெல்லித்தோப்பு தொகுதியில் 5 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன். அவரது மறைவுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்