ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து

புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில் மது விருந்து ஏற்பாடு செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து
x
புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில்  மது விருந்து ஏற்பாடு செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.  அங்குள்ள ராயப்பேட்டை என்ற இடத்தில், நள்ளிரவு நேரத்தில் "டிஜே" நடன இசையுடன் மதுபான விருந்து நடப்பதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற  போலீசார் அனுமதியின்றி மதுபான விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த யுவராஜ், முந்திரி தோப்பு உரிமையாளர் பலராமன் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்