குஜராத் : இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் திறப்பு

குஜராத்தில் உள்ள ரையோலி என்ற குக்கிராமத்தில் இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
குஜராத் : இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் திறப்பு
x
இந்தியாவின் ஜுராசிக் பார்க் என்றழைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு அரிய வகை டைனோசர் எலும்புகள், படிமங்கள், முட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக அளவு டைனோசர் எலும்பு படிமங்கள் கிடைத்த ஒரு சில இடங்களில் இந்த பகுதியும் ஒன்றாகும். இந்நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்