ஆப்ரேசன் புளூஸ்டார் நினைவு தினம் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் பலத்த பாதுகாப்பு
35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பொற்கோவிலில் மறைந்திருந்த தீவிரவாத மதத் தலைவர் ஜே.எஸ்.பிந்தரரன்வாலே மற்றும் அவரின் ஆதரவாளர்களை அகற்றும் நடவடிக்கை நடைபெற்றது.
35 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பொற்கோவிலில் மறைந்திருந்த தீவிரவாத மதத் தலைவர் ஜே.எஸ்.பிந்தரரன்வாலே மற்றும் அவரின் ஆதரவாளர்களை அகற்றும் நடவடிக்கை நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டு ஜூலை ஒன்று முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையின் விளைவாக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரின் சீக்கிய மெய்காப்பாளர்களால் நடைபயிற்சியின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆப்ரேசன் புளூஸ்டாரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர, பொற்கோவில் உள்ளேயும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பொற்கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் சி.சி.டி.வி. கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Next Story

