" இந்திய ஜிடிபி 7.5 சதவீதமாக உயரும் " - உலக வங்கி வளர்ச்சி கணிப்பில் தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.
 இந்திய ஜிடிபி 7.5 சதவீதமாக உயரும்  - உலக வங்கி வளர்ச்சி கணிப்பில் தகவல்
x
உலக வங்கி வெளியிட்டுள்ள சர்வதேச  பொருளாதார வளர்ச்சி என்கிற அறிக்கையில், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டில்  7 புள்ளி 5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என குறிப்பிடுள்ளது. 2020-21 , 2021 -22 என அடுத்தடுத்த நிதியாண்டுகளிலும் இந்தியா 7 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கூறியுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி எடுத்து வரும் முயற்சிகள், திட்டமிட்டபடி நிதி பற்றாக்குறையை இலக்கை எட்டுவது, போன்ற இலக்குகளால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை சந்திக்கும்.

முன்னதாக ஜனவரி மாதம் வெளியிட்ட கணிப்பில், 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக சரிந்தது. கடந்த நிதி ஆண்டின் 4 வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 புள்ளி 8 சதவீதமாக சரிந்தது. இந்தியா- பாக் நாடுகளுக்கு இடையே உருவாகும் போர் பதற்றங்கள், ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் சீராக இல்லாதது போன்றவைகளால் இந்தியாவின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டதாக அறிக்கை தகவல் 2017-18 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 புள்ளி 2 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில்தான் நடப்பு நிதியாண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி கணிப்பை உலக வங்கி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்