இந்திய விமானப்படையின் ஏஎன் - 32 ரக போர் விமானம் 13 பேருடன் மாயம்

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டனோவ் 32 எனப்படும் இந்த விமானத்தில், 8 விமானப்படை வீரர்கள் மற்றும் 5 பயணிகள் என 13 பேர் பயணம் செய்தனர். அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்தின் 
மெச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்பட்டது.  ஆனால், விமானம் அங்க தரையிறங்கவில்லை. இறுதியாக பகல் 1 மணி அளவில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனையடுத்து, காணாமல் போன AN-32 ரக விமானத்தை தேடும் பணியில், சுகோய் 30 மற்றும், சி 130 ரக சிறப்பு தேடுதல் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சீன எல்லையையொட்டியுள்ள, அருணாசல பிரதேச வான்பகுதியில் பறந்த போது விமானம் மாயமானதாக, முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்