எல்.ஜி. நிறுவனத்தின் அதிநவீன ஃபேன் : இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

எல். ஜி. நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அதிநவீன ஃபேன் ஒன்றை இந்தியாவில் முதல் முறையாக, சென்னை தி.நகரில் உள்ள ரத்னா பேன் ஹவுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்.ஜி. நிறுவனத்தின் அதிநவீன ஃபேன் : இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்
x
26 வாட்ஸ் திறன் கொண்ட இந்த ஃபேன், அனைத்து புறங்களிலும் காற்று வீசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை கூளிங் இயந்திரம் பொருத்தப்பட்டதால் கொசு தொல்லை இருக்காது எனவும் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் எனவும் விற்பானையாளர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, நீண்ட நாள் உழைக்க கூடிய, அழகிய தோற்றம் கொண்ட, சத்தம் இல்லாத வகையிலும் இந்த ஃபேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் செல்போன் மூலம் இயக்கும் வகையில் வைஃபை (Wifi) வசதியும் உள்ளது.  5 மாடல்களில், 4 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நவீன ஃபேன், 11ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாயை வரை விற்பனை செய்யப்படுவதாக, விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்