கண்ணாடி பாட்டில்களில் கலைவண்ணம் : பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார்.
கண்ணாடி பாட்டில்களில் கலைவண்ணம் : பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி
x
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், கட்டிடக்கலை படித்து வரும் மேகா மென்டன் என்ற மாணவி, வீணாக தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு அழகிய கலை பொருட்களை உருவாக்கியுள்ளார். அதனை காட்சி படுத்தியுள்ள அவர், கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் உடையும் போது, அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெரும் காயங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தெருக்களில் தூக்கி வீசப்படும் கண்ணாடி பாட்டில்கள் சுற்றுப்புறசூழல்களை மாசுப்படுத்தும் என்பதால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தே இந்த கண்காட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்