வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி-46...

பூமியை கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக் கோளைச் சுமந்த படி இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி-46 (PSLV C-46)ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி-46...
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் காலை 5.27 மணிக்கு  விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்விசி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 'ரீசாட்-2பிஆர்1' என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை  அது வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. . இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை கூறி, மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த செயற்கைக் கோள் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்கும்  என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்