பத்மாவதி பரிணய உற்சவம் - குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்...
பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் நிகழ்வில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மலையப்ப சுவாமி, பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட திருக்கல்யாண வைபவம், பரிணய உற்சவமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொண்டாடப்படுகிறது. பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் நிகழ்வில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்து, ஊஞ்சல் சேவை நடத்தினர்.
Next Story

