2 மாதங்களில் ரூ.3,622 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சி தகவல்

மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
2 மாதங்களில் ரூ.3,622 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சி தகவல்
x
மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.  புனேவை சேர்ந்த விகார் துருவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி எவ்வளவு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது என்கிற தகவலைக் கோரியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ வங்கி, மார்ச் மாதத்தில் ஆயிரத்து 365 கோடிக்கும், ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 256 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை பத்திரங்கள் மூலம், உச்சகட்ட தேர்தல் பிரசார நேரத்திலும் அரசியல் கட்சிகளின் நன்கொடை வசூல் தீவிரமமாக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்