சாக்குமூட்டையில் ஆண் சடலம் - மனைவி கைது...

புதுச்சேரியில் சகோதரி மற்றும் பிரபல ரவுடி உதவியுடன் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவியை போலீசார், கைது செய்துள்ளனர்.
x
கடந்த 6 ஆம் தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் புதுச்சேரி 100 அடி சாலையில்,  கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். . அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கமலக்கண்ணன் கழுத்து நெறிக்கப்பட்டும், மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் விசாரித்த போது, அவர் தன் கணவரை கொலை செய்த‌தை ஒப்புக்கொண்டுள்ளார். மதுவுக்கு அடிமையான கமலக்கண்ண‌ன் மனைவி ஸ்டெல்லா மீது சந்தேகப்பட்டு அவ்வபோது அடித்து உதைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அவரை கொல்ல திட்டமிட்ட மனைவி ஸ்டெல்லா, தனது சகோதரி ரெஜினாவிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி முதலில் ஸ்டெல்லா பழச்சாறில் விஷம் கலந்துகொடுத்த நிலையில், கமலக்கண்ணன் மயங்கியுள்ளார். அவர் உயிரிழக்காத்த‌தால், சகோதரி ரெஜினாவின் ஆண் நண்பரும், பிரபல ரவுடியுமான தமிழ் மணியை வரவழைத்து மூவரும் சேர்ந்து, கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். பின் உடலை சாக்குப்பையில் கட்டி கழிவு நீர் கால்வாயில் போட்டுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்