தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட, சிறப்பு விசாரணை குழு தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி
x
2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் வரை, உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது குறித்து  விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய பெண் இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து நீதிபதி பாப்டே தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரில் எந்தவிதமான முகாந்திரமும் போதிய ஆதாரங்களும் இல்லை என்பதால், வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டுள்ளது.


"இந்திய பெண் பிரஜை என்ற முறையில் அநீதி இழைப்பட்டுள்ளது" -  பெண் ஊழியர் குற்றச்சாட்டு 

இதனிடையே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் அளித்த பெண் ஊழியர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்புக் குழுவின் முடிவு ஒரு இந்திய பெண் பிரஜை என்ற முறையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூறியுள்ளார்.  சிறப்புக் குழுவின் முன்பு அனைத்து விதமான ஆதாரங்களும், சாட்சிகளும் வைக்கப்பட்ட போது எனக்கு நீதியோ பாதுகாப்போ, கிடைக்கவில்லை என்றார். மேலும் தமது வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்