சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
x
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற, 27 லட்சம் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 99 சதவிகிதம் பேர், தேர்ச்சியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்