ஒடிசாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிவாரணம் : ஆய்வுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்துக்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஒடிசாவுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிவாரணம் : ஆய்வுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
x
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வான்வழியாக பருந்து பார்வையில் ஆய்வு செய்தார். முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அம்மாநில உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஃபானி புயலின் போது, அரசின் அறிவுரைகளுக்கு ஏற்ப செயல்பட்ட ஒடிசா மக்களின் செயல்பாடு  மதிப்பிட இயலாத ஒன்று என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 381 கோடி ரூபாய் ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மற்றும் தொடர்பு சுமூகமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்