சிரஞ்சீவியின் 'சைரா' படப்பிடிப்பு அரங்கில் பயங்கர தீ

ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சிரஞ்சீவியின் சைரா படப்பிடிப்பு அரங்கில் பயங்கர தீ
x
ஐதராபாத் அருகே சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில், திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறுதிகட்ட படப்பிடிப்பின் போது, தீ விபத்து ஏற்பட்டதால் சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகுவதில் கால தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. கோகபேட்டில் உள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் பண்ணை வீட்டில், இந்த படத்திற்கான பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்