சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

மசூர் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநா சபை அறிவித்துள்ளது.
சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
x
மசூர் அசாரை சர்வதேச தீவிரவாதியாக  ஐநா சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு முதல் இந்தியா அறிவுறுத்தி வருகிறது என்றார். இந்தியாவின் நீண்ட போராட்டத்தை அடுத்து ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என ஐநா சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  பாகிஸ்தானில் வசிக்கும் மசூத் அசார்,  இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை முக்கிய காரணமாக இருந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்