பிரியங்காவுடன் செல்லச் சண்டையிட்ட ராகுல்

உத்தரபிரதேசத்தில் பிரியங்காவுடன், ராகுல்காந்தி செல்லச் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிரியங்காவுடன் செல்லச் சண்டையிட்ட ராகுல்
x
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், அவரின் சகோதரி பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கான்பூரில், இருவரும் நேற்று எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல்காந்தி, தொலைவில் இருந்து வரும் தான் சிறிய ஹெலிகாப்டரில் பயணிப்பதாகவும், குறைந்த தொலைவே பயணிக்கும் தன் சகோதரி பிரியங்கா, பெரிய ஹெலிகாப்டரில் பறப்பதாகவும் கூறினார். ராகுல்காந்தியின் இந்த பேச்சை, புன்சிரிப்புடன் பிரியங்கா மறுத்துள்ளார். சகோதரியுடனான ராகுலின் இந்த செல்லச் சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்