கள்ளக்காதலி ஏற்காததால் வியாபாரி ஆத்திரம் : மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் - இருவரும் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம்

கள்ளக்காதலி தன்னை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த வியாபாரி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலி ஏற்காததால் வியாபாரி ஆத்திரம் : மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் - இருவரும் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம்
x
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம்  சுல்தான்பெத்தேரி அருகே  உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் பென்னி. பர்னீச்சர் கடை நடத்தி வந்த அவர் அதே பகுதியை சேர்ந்த ஆமிலா என்ற பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.  ஆமிலாவுக்கு திருமணமாகி  3 பெண் குழந்தைகள் உள்ளன. பென்னியும், ஆமிலாவும் பல ஆண்டுகளாக  பழகி வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்சினை உருவானதாக கூறப்படுகிறது.  இதனால் கணவரின் அறிவுரைப்படி ஆமிலா, பென்னியுடன் பழுகுவதை நிறுத்தி கொண்டார். ஆமிலாவின் பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அவரது வீட்டிற்கு சென்ற பென்னி, தன்னுடன் தொடர்ந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை ஆமிலா ஏற்காததால் ஆத்திரமடைந்த பென்னி, அவரை கொல்ல முடிவு செய்தார்.  தனது உடலில் ஜெலட்டின் குச்சிகளை  கட்டி கொண்டு மனித வெடிகுண்டாக ஆமிலா வீட்டிற்கு சென்ற பென்னி தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆமிலா கொல்லப்பட்டார். பென்னியும் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது குண்டு வெடித்தது போல் பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது இருவரும் உடல்சிதறி கிடந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்காதலி தன்னை ஒதுக்கியதா​ல்  மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவம்  கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்