புதிய ரூ.20 நோட்டு - வெளியிட்டது, ரிசர்வ் வங்கி

எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ரூ.20 நோட்டு - வெளியிட்டது, ரிசர்வ் வங்கி
x
100 மற்றும் 50 ரூபாய் புதிய நோட்டுகள் ஏற்கனவே வெளியாகி புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது  புதிய 20 ரூபாய் நோட்டையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களிலும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.புதிய நோட்டுக்கள் வந்தாலும், பழைய 20 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்