"மே 6 முதல் 13க்குள் தாக்குதல் நடைபெறும்" : ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல்

இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மற்றும் முதலமைச்சர்களின் வீடுகளில் தாக்கல் நடத்தப்போவதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
x
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பாக ஜெய்ஷ் இ முகமது சார்பாக மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச போலீஸ் டிஜிபி ஆகியோரது வீடுகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத இயக்கம் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வழிபாட்டு தலங்களிலம் தாக்குதல் நடத்தப்படும் எனவும், மே 6ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை இந்த தாக்குதல் நடக்கும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து, முதலமைச்சர்களின் வீடுகளிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்