புதுச்சேரி : சிறுமிகள் பாலியல் வழக்கு - 8 போலீஸ் அதிகாரி விடுவிப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமிகள் பாலியல் வழக்கில் டிஸ்மிஸ் செய்யபட்ட 8 போலீஸ் அதிகாரிகளை புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது.
புதுச்சேரி : சிறுமிகள் பாலியல் வழக்கு - 8 போலீஸ் அதிகாரி விடுவிப்பு
x
புதுச்சேரி நகர பகுதியில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பெரியகடை காவல்நிலையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டு புகார் வந்தது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றபட்டது. தீவிர விசாரணையில் போலீசார் மற்றும் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக 18 போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 8 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தனபால் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்