தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் : விசாரணை குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்
தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தலைமை நீதிபதி தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் விசாரணைக் குழுவில் இடம்பெறுவது சரியாக இருக்காது எனவும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு ரமணா கடிதம் அனுப்பியுள்ளார். வழக்கின் விசாரணை நாளை தொடங்கவிருக்கும் நிலையில் நீதிபதி ரமணா விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நீதிபதி ரமணாவுக்கு பதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா விசாரணை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story