ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

உலகில் தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
x
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி இலங்கை மக்களுக்கு தேவையான  அனைத்து உதவிகளையும் செய்ய புதுச்சேரி மாநில அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்