இறுதிக் கட்ட பிரசாரத்தின் போது கட்சியினரிடையே மோதல்.. கல்வீச்சு.. பதற்றம்..

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணி உடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.
இறுதிக் கட்ட பிரசாரத்தின் போது கட்சியினரிடையே மோதல்.. கல்வீச்சு.. பதற்றம்..
x
கேரளாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணி உடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது. முன்னதாக இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது, காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே நிலவிய மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் ஊர்வலத்தை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேப்போல, பத்தணந்திட்டையில் பாஜக வேட்பாளரின் வாகனத்தை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். திருவல்லா பகுதியில் கம்யூனிஸ்ட் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. வடகரை தொகுதியில்  நடைபெற்ற மோதலையொட்டி, வாக்கெடுப்பு நாளான 23ம் தேதி மாலை 6 மணி முதல் 24ம் தேதி இரவு 10 மணி வரை அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்