ஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் ?

இழப்பை சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்
ஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் ?
x
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட  தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. விஸ்தாரா போன்ற புதிய நிறுவனங்கள் உள்நாட்டு சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில் சிறு நகரங்களுக்கான  உதான் சேவைகளும் அதிகரித்து வருகின்றன கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் சேவை அளிக்க அனுமதி கேட்டுள்ளன.
இந்த நேரத்தில் ,கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வைத்துள்ளது.ஏர் இந்தியா 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி நெருக்கடியை சந்தித்த நிலையில், அரசின் தலையீடுகளால் சேவைகளை அளித்துக் கொண்டிருக்கிறது.பாரமவுண்ட் ஏர்வேஸ், டெக்கான் ஏர்வேஸ், ஏர் சஹாரா,ஹிமாலயன் ஏர்லைன்ஸ், கலிங்கா ஏர்லைன்ஸ் என பல நிறுவனங்கள் சேவைகளை அளிக்க முடியாமல் வெளியேறியுள்ளன.119 விமானங்களை கொண்டு  600 உள்நாட்டு வழித் தடங்களிலும், 380 சர்வதேச வழித் தடங்களிலும் விமான சேவை அளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்  நிதி நெருக்கடி காரணமாக ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் சேவைகளை நிறுத்தியுள்ளது.அதில் பணியாற்றி வந்த ஆயிரத்து 300 விமானிகள்  உள்பட 22 ஆயிரம் பணியாளர்கள் நிலைகுலைந்துள்ளனர்இந்தியாவின் விமான சேவை கொள்கைகள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இல்லாததே இது போன்ற நெருக்கடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது .விமான நிறுவனங்களிடையே நடக்கும் கட்டணப் போட்டி,வரி விதிப்பு, எரிபொருள் விலை ஏற்றமும், பாரமரிப்பு கட்டணங்கள், விமான நிலைய வாடகை உயர்வு  போன்றவையும் நிறுவனங்களுக்கு செலவினங்களை அதிகரித்துள்ளன.உள்நாட்டில் 20 விமானங்களுடன்  ஐந்து ஆண்டுகள் விமான சேவையை மேற்கொண்ட நிறுவனத்திற்கு மட்டுமே சர்வதேச விமான சேவைக்கான அனுமதி இந்தியாவில் அளிக்கப்படுகிறது.  அதே நேரத்தில் சர்வதேச விமானச் சேவை நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது.இப்படி பல காரணங்கள் இருந்தாலும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள அத்தனை நிறுவனங்களிலும் நிநிநிலைக் குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. நிறுவனர்களைச் சுற்றி நிதிமோசடி புகார்கள் எழுந்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்