ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? - டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சிமாநில அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? - டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை
x
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சிமாநில அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இதில் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், ஹாரூண் யூசுஃப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க ராகுல் ஏற்கனவே மறுத்ததாக கூறப்படும் நிலையில், தற்போது நடைபெறும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பா.ஜ.க.வை வீழ்த்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும் என பல மூத்த தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்