"நதிகளை இணைத்து மகா சங்கமம் செய்வேன்" : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரை

நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் செய்வேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நதிகளை இணைத்து மகா சங்கமம் செய்வேன் : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரை
x
நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் செய்வேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆந்திராவில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வினுகொண்டாவில் பிரச்சாரத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா - கோதாவரி நதிகளை தாம் இணைத்ததாகவும், அதே போல ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள நதிகளை இணைத்து, குடிநீர் பஞ்சமே இல்லாத ஆந்திராவை உருவாக்குவேன் என்றும் உறுதியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி, தமது ஆட்சிக் காலத்தில் ஒரு கால்வாயை கூட இணைக்கவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்