புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள் : 39 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத வகையில் ஏற்றம் கண்டுள்ளன.
புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள் : 39 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்
x
இந்திய பங்குச் சந்தைகள் இதுவரை இல்லாத வகையில் ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு  புதிய உச்சமாக 39 ஆயிரத்து 56 புள்ளிகளைத் தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு  11 ஆயிரத்து 713 புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது.  பொதுத்துறை நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின்  பங்குகள் அதிக லாபத்தைக் கண்டன.   நடப்பு நிதி ஆண்டின், ரிசர்வ் வங்கி  முதல் நிதிக் கொள்கை கூட்டம்  வரும் 4 ஆம் தேதி நடக்க உள்ளது. அப்போது கடன்களுக்கான வட்டி  குறைப்பு அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்