'எமிசாட்'-வுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி

இந்தியாவின் எமிசாட் உள்பட 29 செயற்கைகோள்களை தாங்கியபடி பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
x
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து, அந்த ராக்கெட் ஏவப்பட்டது. இந்தியாவின் 'எமிசாட்', அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள், லிதுவேனியாவின் 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோள் என மொத்தம் 29 செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் சுமந்து சென்றது. 


உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் 'எமிசாட்'
அவை அனைத்தும் இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள், 753 கிலோமீட்டர் தூரத்தில்  புவிவட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 2-வது செயற்கைக்கோளான 'எமிசாட்', உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உளவு பணிக்கு உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராக்கெட் ஏவுவதை பார்வையிட முதல்முறையாக பொதுமக்களுக்கு இஸ்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ஏவுதளத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்