10 மொழிகளில் பாதுகாப்பு சேவை வசதி : டிக் டாக் செயலி அறிவிப்பு

டிக் டாக் செயலி இந்தியாவில் 10 மொழிகளில் பாதுகாப்பு சேவை என்கிற வசதியை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
10 மொழிகளில் பாதுகாப்பு சேவை வசதி : டிக் டாக் செயலி அறிவிப்பு
x
இளைஞர்களை அதிகம் ஈர்த்துள்ள டிக் டாக் செயலி மூலம் தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்க அந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக் டாக் செயலி மூலம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதை  தடுக்கவும்  பாதுகாப்பு சேவையை அதிகரிக்கவும், உள்ளூர் மொழிகளில் புதிய வசதியை அளிக்க  உள்ளதாக அந்த நிறுவனத்தின் சர்வதேச தகவல் தொடர்பு அதிகாரி  ஹெலனா லெர்ஷே கூறியுள்ளார். இந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழிகளில் இந்த சேவை இணைக்கப்பட உள்ளன. இந்த சேவையில், செயலியை பயன்படுத்துவதற்கான  பாதுகாப்பு நடைமுறைகள்,  தேர்தல் ஆணையத்தின் விதிகள் ஆகியவை உள்ளூர் மொழிகளில் இடம் பெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்