போக்குவரத்து காவலருக்கு அடி- உதை : கடுமையாக தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள்
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் போக்குவரத்து காவலர் ஒருவரை ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தவறான திசையில் ஆட்டோவை இயக்கியதால் போக்குவரத்து காவலர் ஆட்டோவை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலை நடுவே போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். சக காவலர் முன்பே அரங்கேறிய இந்த கொடூர தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story