விண்வெளித் துறையில் இந்தியா மிக முக்கியமான சாதனை படைத்திருக்கிறது - பிரதமர் மோடி

விண்வெளித் துறையில் இந்தியா மிக முக்கியமான சாதனையை படைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விண்வெளித் துறையில் இந்தியா மிக முக்கியமான சாதனை படைத்திருக்கிறது - பிரதமர் மோடி
x
நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், "மிஷன் சக்தி" வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகக் கூறினார். செயற்கைக்கோள் மூலம் ஏவப்படும்  "ஏ-சாட்" எனும்  அந்த ஏவுகணை, 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு இந்தியாவின் லியோ செயற்கைக்கோளை 3 நிமிடத்தில் தாக்கி அழித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்மூலம், திருட்டுத்தனமாக நாட்டை கண்காணிக்கும், செயற்கை கோள்களை இனி தகர்த்தெறிய முடியும் என அவர் பெருமிதத்துடன் கூறினார். அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விண்வெளித்துறையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் திடீர் உரை - அடுத்து என்ன? - ரவீந்திரன் துரைசாமி கருத்து



பிரதமர் நரேந்திர மோடி திடீர் உரை - ஷ்யாம் மூத்த பத்திரிகையாளர் கருத்து



பிரதமர் உரை : எதிர்கால அச்சுறுத்தல்கள் விண்வெளி மூலமாக இருக்குமா..? - நம்பி நாராயணன் விஞ்ஞானி



விஞ்ஞானிகள் வெற்றியை தன் வெற்றி என்று பேசுவதில் பிரதமர் வல்லவர் - பீட்டர் அல்போன்ஸ்



Next Story

மேலும் செய்திகள்