மறைந்த முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் மனைவிக்கு சீட் இல்லை : அனந்தகுமார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யாவுக்கு வாய்ப்பு
மறைந்த முன்னாள் அமைச்சர் அனந்தகுமார் மனைவிக்கு சீட் இல்லை : அனந்தகுமார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
மறைந்த முன்னாள் அமைச்சர் அனந்த்குமார் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுக்கப்பட்டதை கண்டித்து,பெங்களூருவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர் வெற்றி பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமார் கடந்த நவம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து,இந்தத் தொகுதியில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி-க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.இந்நிலையில், 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி சூர்யாவுக்கு, பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த அனந்த் குமார் ஆதரவாளர்கள் பாஜக தொண்டர்கள், தேஜஸ்வினி வீட்டிற்கு வந்திருந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜா சந்திரசேகரின் காரை வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்