இரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு

வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு
x
வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரையாடுகளின் பிரசவ காலம் என்பதால், அப்போது பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். இந்நிலையில் இந்தாண்டுக்கான பிரசவகாலம் முடிவடைந்ததை அடுத்து, 64 நாட்களுக்கு பிறகு நாளை பூங்கா திறக்கப்பட உள்ளது. இதுவரை 55 குட்டிகள் பிறந்ததுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்