கேரளா... யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது? 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற போவது யார்?
கேரளா... யாருக்கு சாதகம்...?
x
* கேரள மாநிலத்தை பொறுத்தவரை  தேசிய கட்சிகளுக்கு தான் செல்வாக்கு அதிகம். பெரும்பாலான தேர்தல்களில் தேசிய கட்சிகளே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மாநில கட்சிகளுக்கு கேரளாவில் அதிக பலம் இல்லை... 

* காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்களே கேரள மாநிலத்தின் முதல்வர்களாக இதுவரை 
மாறி மாறி இருந்து வருகின்றனர்.

* கேரள மாநிலத்தில் மொத்தம் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

* கேரளாவில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 74.04 சதவீத வாக்குகள் பதிவாகின. 

* காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், முஸ்லீம் லீக் கட்சி, கேரளா காங்கிரஸ், சோசியலிச ஜனதா கட்சி,
புரட்சிகர சோசியலிச கட்சி ஆகியவை இடம் பெற்றன. 

* சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியில்
சி.பி,ஐ, மதசார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோசியலிச போல்ஷ்விக் கட்சி ஆகியவை இடம் பெற்றன.

* கேரளாவில் 2014 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 31.10 சதவீத வாக்குகளை பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றது.

* அதன் தோழமை கட்சிகள் 4 இடங்களில் வென்றன. மொத்தம் 12 இடங்கள் இந்த அணிக்கு கிடைத்தது. அன்றைய கேரள
முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அணி பெரும் வெற்றி பெற்றது.

* சி.பி.எம் கட்சி 21.59 சதவீத வாக்குகள் பெற்று, 5 இடங்களில் வெற்றி பெற்றது. சி.பி.எம் ஆதரவு பெற்ற சுயேட்சைகள்
2 இடங்களில் வெற்றி பெற்றனர். சி.பி.ஐ ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 8 இடங்கள் இந்த அணிக்கு கிடைத்தது. 

* பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. 

* 2016 கேரள சட்டமன்ற தேர்தலில், 43.48 சதவீத வாக்குகள் பெற்று, 91 இடங்களில் வென்று, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றார். 

* ஐக்கிய ஜனநாயக முன்னணி 38.81 சதவீத வாக்குகள் பெற்று, 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. பா.ஜ.க ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

* இந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கும் சசி தரூர், சென்ற முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர். ஐ.நா சபையின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றியவர். மன்மோகன் சிங் காலகட்டத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர்.  


* சாலக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இடதுசாரி முன்னணியின் ஆதரவோடு 2014இல் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளரான
பழம் பெரும் நகைச்சுவை நடிகர் இன்னசென்ட், இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

* 2014இல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சாக்கோவை தோற்கடித்தவர் நடிகர் இன்னசென்ட்... 

* எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினரரான கே.வி.தாமஸ், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உணவு அமைச்சராக பணியாற்றிய பழம்பெரும் காங்கிரஸ் தலைவர். இந்த முறை அவருக்கு சீட் கொடுக்கப்படாததால்
அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

* சென்ற மாதம் நடைபெற்ற 30 உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத் தேர்தல்களில், 16 இடங்களில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது. 

* 12 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

* கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயில் விவகாரத்தை தேர்தல் சூழலுக்கு பயன்படுத்திக் கொள்ள சில அரசியல் கட்சிகள் காத்திருந்தன. 

* ஆனால் இந்த விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

* சபரிமலை விவகாரம் தேர்தலில் அந்த மாநில மக்கள் எடுக்கப் போகும் முடிவில் தாக்கதத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றன பாஜகவும் காங்கிரஸூம்... 

* ஏப்ரல் 23 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறப் போவது யார் என்பதை மக்கள் முடிவு செய்யும் நாளாகவே இருக்கும்...  

Next Story

மேலும் செய்திகள்