ரஃபேல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் விசாரணை

ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
ரஃபேல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் விசாரணை
x
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சி.ஏ.ஜி. அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டு இருப்பதாக தெரிவித்தார். அவற்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ரஃபேல்  விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு  பெற கூடியவை அல்ல என்று அவர் கூறினார். மனுதாரர்கள், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.  

பின்னர் வாதிட்ட மனுதாரர் பிரசாந்த் பூஷன், ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு கூறும் விவகாரத்தில் இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்