மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலை என்ன

மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
x
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மகளிர்  மசோதாவை தாக்கல் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. முதன் முறையாக 1996-ம் ஆண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 1997-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் முதல்முறையாக மகளிர் மதோசாவை தாக்கல் செய்ய முயற்சி செய்தார். ஆனால்  சொந்த கட்சியினரே அவரது கையில் இருந்த மசோதாவை பிடுங்கி கிழித்தெறிந்தனர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படாமல் மசோதாவை தாக்கல் செய்வதும், விவாதம் செய்வதும் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இந்த மசோதா கடந்த 2008 ஆண்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், கடும் எதிர்ப்பு காரணமாக மக்களவையில் இன்னும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்